பிரபல சின்னத்திரை நடிகை துனிஷா ஷூட்டிங் செய்து கொண்டு இருந்த இடத்தில் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் 20 வயதான பிரபல சின்னத்திரை நடிகை துனிஷா ஷர்மா ஷூட்டிங் ஸ்பாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலி பாபா என்ற சீரியல் மூலம் பிரபலமான துனிகா ஷர்மாவுக்கு ரசிகர்கள் அதிகம்.
நேற்று படப்பிடிப்புக்கு சென்ற துனிஷா ஷூட்டிங் ஸ்பாட்டில் மேக்கப் போடப்படும் அறைக்கு சென்று இருந்தார். இந்நிலையில், திடீரென மேக்கப் அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்த துனிஷா சர்மாவை சக குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலைக்கான காரணத்தை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.