fbpx

மீனாவை 2-வது மனைவியாக்க வீட்டில் பெண் கேட்ட நடிகர்..!! யாருன்னு தெரியுமா..?

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றவர் நடிகை மீனா. ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா, முத்து, எஜமான் போன்ற திரைப்படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து கமல்ஹாசன், அஜித் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்து சுமார் 40 ஆண்டுகள் ஆனதை அண்மையில் விழாவாக கொண்டாடினர். மீனாவின் கணவர் நுரையீரல் தோற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

கணவர் மரணத்திற்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்ற கனவோடு இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கிறார். மலையாளத்தில் நடிகர் மோகன்லாலுடன் நடித்த திரிஷ்யம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், மீனா குறித்த ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

மீனா உச்ச நடிகையாக கொடிகட்டி பறந்துக்கொண்டிருந்த சமயத்தில் நடிகர் சரத்குமார் மீனா மீது காதல் வயப்பட்டு ”என்னை திருமணம் செய்துக்கொள்வீர்களா” என கேட்டாராம். அதற்கு மீனா, உடனே வேண்டாம் என்று நிராகரித்தால் பகையாக மாறிடுமோ என அஞ்சி என் வீட்டில் வந்து முறையாக பெண் கேளுங்கள் என கூறினாராம். சரத்குமாரும் வீட்டிற்கு சென்று பெண் கேட்க மீனாவின் அம்மா, அவள் இப்போதுதான் சினிமாவில் வளர்ந்துக் கொண்டிருக்கிறாள். எனவே நாங்கள் திருமணத்தை பற்றி இன்னும் யோசிக்கவில்லை என கூறி நிராகரித்துவிட்டாராம். அந்த சமயத்தில் சரத்குமார் ஏற்கனவே சாயா என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார். இரண்டாம் தரமாக கேட்டதால் மீனாவின் அம்மா சூசமாக வேண்டாம் என கூறிவிட்டாராம்.

Chella

Next Post

அதிர்ச்சி..!! சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை மீண்டும் வெளுத்து வாங்கப்போகிறது..!!

Wed Dec 6 , 2023
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மக்கள் மிகவும் மோசமான சூழ்நிலையை […]

You May Like