fbpx

பாலிவுட் நடிகருடனான காதலை ஒப்புக்கொண்ட நடிகை..?

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் நடிகை தமன்னா. தமிழில் ‘கேடி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, அதன்பிறகு தனுஷ் நடித்த ‘படிக்காதவன்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பின்னர் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர், தமிழில் விஜய், அஜித், கார்த்தி, சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார். தெலுங்கில் பிரபாஸ், சிரஞ்சீவி உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் தமன்னா. தற்போது இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வரும் அவர், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சுந்தர்.சி-யின் அரண்மனை நான்காம் பாகத்தில் தமன்னா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், கடந்த வருடம் ஹன்சிகாவைப் போன்று மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்ய தமன்னா சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் பரவிய நிலையில், அதனை அவர் மறுத்திருந்தார். பின்னர், பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவும் தமன்னாவும் காதலிப்பதாக தொடர்ந்து பதிவுகள் பகிரப்பட்டு வந்தன. அவர்கள் இருவரும் சேர்ந்து அவ்வப்போது பொது இடங்களுக்கு செல்லும் புகைப்படங்களும் வைரலாகின.

உங்களுக்கும், விஜய் வர்மாவுக்கும் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ படப்பிடிப்பில் தான் விஷயங்கள் (காதல் ஏற்பட்டதா) மாறியதாக என்று நெறியாளர் கேட்டதற்கு, அதற்கு அவர் ஆமாம் என்று தெரிவித்துள்ளார். தான் பல நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த நபர் அவர் தான் என்றும், அவர் தான் தன்னுடைய மகிழ்ச்சிக்கான இடம் என்றும் நடிகை தமன்னா, விஜய் வர்மா உடனனான காதல் பற்றி கூறியுள்ளார்

Maha

Next Post

மக்களே டைம் இல்ல..!! பான் கார்டில் செய்ய வேண்டிய முக்கியமான மாற்றம்..!! இதை பண்ணுனா போதும்..!!

Tue Jun 13 , 2023
பான் கார்டில் முக்கியமான விவரங்களை மாற்றுவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். நாம் வைத்திருக்கும் அடிப்படை அட்டைகளில் ஒன்றாக பான் கார்டு அட்டையும் மாறிவிட்டது. பான் அட்டை பயன்படுத்துவதன் மூலம்தான் வங்கி தொடர்பான பல சேவைகளை நாம் பெற முடிகிறது. நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. பான் கார்டு என்பது நம்முடைய நிரந்தர கணக்கு எண் ஆகும். நமது […]

You May Like