டிசம்பர் 5, 1932 அன்று ஈராக்கின் பாக்தாத்தில் பிறந்தவர் தான் நதிரா. இவரின் உண்மையான பெயர் ஃப்ளோரன்ஸ் எசேக்கியேல்.. அவரின் குடும்பத்தினர் தொழில் வாய்ப்புக்காக பாக்தாத்தில் இருந்து மும்பைக்கு குடிபெயர்ந்தனர். 1950 மற்றும் 1960 களில் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக நதிரா இருந்தார். 60 களில் இந்தியாவில் ஆடம்பரமான ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கிய முதல் நடிகையும் இவரும் தான்..
இவர் 1943 ஆம் ஆண்டு 11 வயதில் மௌஜ் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். ஆனால் மெஹபூப் கான் இயக்கத்தில் 1952 ஆம் ஆண்டு வெளியான Aun என்ற ஹிந்தி படம் நதிராவின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தனது முதல் படத்திற்கு நதிரா ரூ.1200 சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது, இது அந்த நேரத்தில் மிகக் குறைந்த தொகையாகக் கருதப்பட்டது.
60களில், ஸ்ரீ 420, தில் அப்னா அவுர் ப்ரீத் பராய், சோட்டி சோட்டி பாடீன், ஏக் நான்ஹி முன்னி லட்கி தி, சஃபர், பாம்பே டாக்கி, பக்கீசா, அனோகா தான், ஹன்ஸ்தே ஜக்ம், அமர் அக்பர் அந்தோணி, தஹ்ஷத், சாகர், தமன்னா மற்றும் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நதிரா நடித்தார். இதன் மூலம் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் நதிரா மாறினார்..
இருப்பினும், ஒரே ஒரு படத்தில் அவர் நடித்தது அவர் திரை வாழ்க்கையையே மாற்றியது. இறுதியில் அவர் பாலிவுட்டில் ஒரே மாதிரியாக நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒருமுறை, ஒரு நேர்காணலில் பேசிய நதிரா எல்லா நடிகைகளையும் போலவே எனக்கும் ராஜ் கபூருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே ஆசை என்று கூறியிருந்தார்.
பின்னர் அவர் ஸ்ரீ 420 படத்தில் ராஜ் கபூருடன் நெகட்டிவ் ரோலில் நடித்தார். அந்த படம் சூப்பர்ஹிட்டானது, ரசிகர்களும் விமர்சகர்களும் அவரது நடிப்பை பரவலாகப் பாராட்டினர். இருப்பினும், அதைத் தொடர்ந்து, பல இயக்குனர்கள் உடனடியாக அவரை எதிர்மறை வேடங்களில் மட்டுமே தேர்ந்தெடுத்தனர், இது அவரது திரை வாழ்க்கையை பாதித்தது.
பாலிவுட்டில் தனது வழக்கமான பிம்பத்தை உடைக்க 200க்கும் மேற்பட்ட படங்களை நதிரா நிராகரிக்க வேண்டியிருந்தது என்று கூறப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, நதிராவுக்கு நெகட்டிவ் ரோல்களில் நடிக்க மட்டுமே வாய்ப்புகள் குவிந்தது.
இதுகுறித்து ஒரு நேர்காணலில் பேசிய நதிரா, நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்க ஒருபோதும் விரும்பவில்லை என்று கூறியிருந்தார். மேலும் “நான் நெகட்டிவ் ரோலில் நடிக்க விரும்பவில்லை. ஆனால் அப்போது எனக்கு சில நல்ல ஆலோசனைகள் கிடைத்திருந்தால், அந்த வேடங்களில் நான் நடித்திருக்க மாட்டேன்.” என்று தெரிவித்தார்.
இந்தி சினிமா வரலாற்றில் மிகச் சிறந்த நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தபோதிலும், நதிரா எப்போதும் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். அவர் கடைசிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. திரைத்துறையில் உச்சத்தில் இருந்த போதும், அதன்பின்னரும் கூட அவர் தொடர்பாக எந்த கிசுகிசுக்களும் வெளிவரவில்லை. தனது வாழ்க்கையின் பிற்பகுதியில் அவர் எந்த பாலிவுட் விருந்துகளிலோ அல்லது பொது நிகழ்வுகளிலோ அரிதாகவே கலந்து கொண்டார்.
துரதிர்ஷ்டவசமாக, பிப்ரவரி 9, 2006 அன்று, நதிரா தனது 73 வயதில் நீண்டகால உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
Read More : நினைவாற்றலை இழந்த பானுப்ரியா.. மூத்த நடிகையின் சோகமான வாழ்க்கை..!!