திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய வழக்கில் ‘லிவ்-இன்’ உறவின் எல்லைகளை வகுக்க வேண்டும் என்று கூறிய அலகாபாத் உயர் நீதிமன்றம், உத்தரவிட்டது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த ஆகாஷ் கேஷ்ரி என்பவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் உறவு கொண்டார். ஆனால் அந்தப் பெண்ணை அவர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ஆகாஷ் கேஷ்ரி மீது எஸ்சி/எஸ்டி சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சாரநாத் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
இம்மனு உயர் நீதிமன்ற நீதிபதி நளின் குமார் வஸ்தவா முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி நளின் குமார் வஸ்தவா, ‘லிவ்-இன் உறவை சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் அத்தகைய உறவுகளால் ஈர்க்கப்படுகிறார்கள். லிவ்-இன் உறவில் இருக்கும் ஆணோ, பெண்ணோ தன்னுடன் இருப்பவருடன் விருப்பத்தின் பேரில் உறவை வைத்துக் கொள்கின்றனர். இல்லாவிட்டால் இருவரும் தங்களது உறவில் இருந்து விலக்கிக் கொள்கின்றனர்.
இத்தகைய லிவ்-இன் உறவு மீதான ஈர்ப்பு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. லிவ்-இன்-ரிலேஷன்ஷிபை சமூக ரீதியாக நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், இந்த உறவின் கட்டமைப்பு அல்லது விதிகளை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். என்று கூறி குற்றம்சாட்டப்பட்ட ஆகாஷ் கேஷ்ரிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
Read more ; மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. மாதம் ரூ.1,60,000 வரை சம்பளம்..! மிஸ் பண்ணிடாதீங்க..