fbpx

Breaking: பாஜக – பாமக இடையிலான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து..!

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணியை நேரில் சந்தித்த பாஜக நிர்வாகிகள் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்தானது.

பாஜக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக, மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை சில சிறிய கட்சிகள் மட்டுமே கூட்டணியில் இணைந்துள்ளன. மேலும், பாஜகவும் தமது தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வியூகம் அமைத்து வருகிறது.

அதிமுகவுடன் நேற்று வரை கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திய பாமக திடீர் திருப்பமாக பாஜக கூட்டணியில் இணைந்த நிலையில், கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட தைலாபுரம் இல்லத்துக்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, எல்.முருகன் வருகை தந்தனர். நீண்ட நேரம் பேச்சு வார்த்தைக்கு பின்னர் பாமக- பாஜக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. தர்மபுரி, கடலூர், விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி), ஆரணி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புத்தூர், சேலம், மத்திய சென்னை, தென்மாவட்டத்தில் ஒரு தொகுதி என மொத்தம் பத்து தொகுதியில் பாமக களம் இறங்க வாய்ப்புகள் உள்ளன.

இன்று சேலம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரையும் மேடையேற்ற பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர். பாமக நிறுவன தலைவர் ராமதாஸ், அன்புமணி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன், உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

Vignesh

Next Post

மீண்டும் மீண்டுமா..? 27-வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!!

Tue Mar 19 , 2024
முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 27-ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராக, கடந்த ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினா் குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்தனா். செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மார்ச் 18ஆம் தேதி (நேற்று) திங்கட்கிழமையுடன் முடிவடைந்தது. இந்நிலையில், […]

You May Like