பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் சுதந்திர போராளிகளாக இருக்கலாம் என அந்நாட்டின் துணை பிரதமர் இஷான் தார் தெரிவித்துள்ளார்.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ‘தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்’ என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளன. இந்த தாக்குதல் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கு எதிராகவும், இந்தியாவுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் உள்பட பல உலக நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, விரைவில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. எல்லையில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். கடற்படை, விமானப்படையும் பயிற்சியை தொடங்கியுள்ளது. இதற்கிடையே தான், இன்று ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.
இந்நிலையில், பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் சுதந்திர போராளிகளாக இருக்கலாம் என அந்நாட்டின் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷான் தார் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் துணை பிரதமர் இஷான் தார் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். மேலும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைப்பது ‘போர் நடவடிக்கை’ என்றும் அவர் கூறியுள்ளார்.
Read More : போருக்கு தயாராகும் இந்தியா..? அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரேல்..!! பாகிஸ்தான் ஒன்னுமே இல்ல..!!