திருவள்ளூர் அருகே புத்தாண்டு ட்ரீட் கொடுப்பதாகக் கூறி இளம்பெண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் காக்களுர் சாலை பகுதியில் வசித்து வருபவர் திருமணமான 26 வயது இளம்பெண். வீட்டில் இருந்து அடிக்கடி பொருட்கள் வாங்க வெளியே செல்லும் போது சீயஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விஜய் உடன் அந்த பெண்ணிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. விஜய் ரொம்ப நல்லவன் என்று நம்பினாள் அந்த பெண். புத்தாண்டு நாளில் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின. தனது வீட்டில் ட்ரீட் தருகிறேன் என்று அந்த பெண்ணை அழைத்துள்ளான் விஜய். சீயஞ்சேரியில் உள்ள விஜய்யின் வீட்டிற்கு ஆசையோடு சென்றுள்ளார் அந்த இளம் பெண். விஜய் வீட்டில் அவனது நண்பர்கள் சாம்ராஜ், சதீஷ் ஆகியோரும் இருந்தனர். அப்போது மூவரும் மது அருந்தியிருந்தனர்.

இரவு நேரம் போதையில் இருந்த விஜய் உடன் தனிமையில் இருந்தார் அந்த பெண். அப்போது அங்கு வந்த விஜய்யின் நண்பர்கள், அந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளனர். அதற்கு அந்த பெண் சம்மதிக்காததால், மூவரும் சேர்ந்து அந்த பெண்ணை மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர். அப்பெண் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். ஆனால், அவர்கள் தப்பியோடிவிட்டனர்.

உடனடியாக இளம் பெண்ணை மீட்டதுடன் காவல் நிலையத்திற்கும் புகார் அளித்தனர். போலீசார் வந்து இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனக்கு நடந்த கொடுமைகளை கண்ணீர் மல்க காவல்துறையினரிடம் கூறினார். அந்த பெண் அளித்த தகவலின் பேரில் தப்பி ஓடிய விஜய், சாம்ராஜ், சதீஷ் ஆகியோரிடம் விசாரித்தனர். அப்போது, குற்றத்தை ஒப்புக்கொள்ளவே மூவரையும் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டிருக்கிறது. புத்தாண்டு நாளில் உலகமே மகிழ்ச்சியோடு கொண்டாடிக்கொண்டிருக்க டிரீட் தருவதாக கூறி ஆட்டோ டிரைவரை நம்பி போன இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் திருவள்ளூரில் திகிலை ஏற்படுத்தியிருக்கிறது.