fbpx

பழனிக்கு நிகரான பால தண்டாயுதபாணி திருக்கோயில். நினைத்ததை நடத்தி வைக்கும் அதிசய தளம்..!! எங்க இருக்கு தெரியுமா..?

தமிழ்நாட்டில் எத்தனையோ புராண வரலாறு கொண்ட கோயில்கள் இருந்து வருகின்றனர். அப்படிபட்ட சிறப்பு வாய்ந்த கோயில்களில் ஒன்று தான் பால தண்டாயுதபாணி திருக்கோயில். கோவை மாவட்டத்தில் குமட்டிபதி என்ற கிராமத்தில் அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோயில் அமைந்துள்ளது.

பழனி முருகன் கோவிலுக்கு குழந்தை வரம் வேண்டிக் கொண்டனர் ஒரு தம்பதியினர்.  வேண்டிக்கொண்டவாறே குழந்தை பாக்கியத்தை முருகப் பெருமான் தர பழனிக்கு சென்று நேர்த்தி கடன் செலுத்த நினைத்தனர். ஆனால் என்ன காரணத்தாலோ பழனிக்கு செல்ல முடியவில்லை. அவர்களது கனவில் வந்த முருகன் இங்குள்ள குன்றில் தமக்கு கோவில் எழுப்புமாறு கூறினார். எனவே தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் பொருட்டு இங்குள்ள குன்றின் மீது முருகனுக்கு கோவில் எழுப்பி வழிபட்டனர். காலப்போக்கில் அது மிகவும் சிறப்பு வாய்ந்த கோவிலாக ஆனது.

350 படிகளை கொண்ட இக்கோயில் மலையின் உச்சியில் உள்ளது. இந்த கோயிலுக்கு செல்வதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று நம் முன்னோர்கள் பயன்படுத்திய கரடு முரடான காட்டுப்பாதை வழியிலும் செல்லலாம். மற்றொன்று சமீபத்தில் அமைக்கப்பட்ட படிகள் மூலமாகவும் மலையின் மீது ஏறிச்சென்று முருகனை தரிசிக்கலாம். வற்றாத கிணறு ஒன்று இந்த குன்றின் அருகில் காணப்படுகிறது.

அந்த கிணறில் இருந்து தான் நீர் எடுத்து விசேஷ நாட்களில் சாமிக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். மேலும் இந்த கிணற்று நீரை தீர்த்தமாகவும் தருகின்றனர். இதன் மூலம் நோய்கள் தீரும் என்பது இக்கோயிலின் நம்பிக்கை. இந்த குன்றிலிருந்து 100 மீட்டர் தூரம் கீழே இறங்கி வந்தால் ஆதி மனிதர்களின் குகைகளை காணலாம்.

மேலும் இந்தக் கோயில்களில் ஆதி மனிதர்கள் எவ்வாறு வாழ்ந்து வந்தார்கள் என்பதும், அவர்கள் வரைந்த ஓவியத்தையும் பார்த்து மெய்சிலிர்க்கிறது.  வெள்ளை நிறத்தில் பாறையின் மேல் வரைந்துள்ள ஓவியத்தில் யானையை கட்டுப்படுத்துவது போலவும், யானையின் மேல் உட்கார்ந்து சவாரி செய்வது போலவும் வரைந்து உள்ளனர். யானைக்கு பயிற்சி அளிக்கும் இடமாகவும், யானை சந்தை இடமாகவும் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.

Read more: ஒரே ஊரில் 200 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு.. 15 பேர் உயிரிழப்பு.. இதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன..?

English Summary

The Bala Thandayutapani Temple, which is equivalent to Palani. Do you know where it is?

Next Post

ரஷ்யா-உக்ரைன் போருக்கு பிறகு இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புடின்!. முடிவுக்கு வருமா போர்?

Fri Mar 28 , 2025
Russian President Putin is coming to India after the Russia-Ukraine war! Will the war end?

You May Like