மகாராஷ்டிராவில் கிரிக்கெட் பந்து பிறப்புறுப்பில் தாக்கியதில் சிறுவன் சுருண்டு விழுந்த உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்தவர் 11 வயது சிறுவன் ஷவுரியா. இவர் கோடை விடுமுறையில் வீட்டில் இருந்த ஷவுரியா, கடந்த வாரம் லோஹேகான் பகுதியில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார். அப்போது, அவர் எதிர்முனையில் நின்ற பந்துவீசியுள்ளார். அப்போது பந்து ஷவுரியாவின் பிறப்புறுப்பில் பலமாகத் தாக்கியுள்ளது. இதனால் வலியால் துடித்த ஷவுரியா, சிறிது நேரத்தில் நிலைதடுமாறி மைதானத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார். ஷவுரியா சுருண்டு விழுந்ததை பார்த்த அவரது நண்பர்கள் ஓடி வந்து,
ஷவுரியாவை எழுப்ப முயற்சித்தனர்.
ஆனால், ஷவுரியா சுயநினைவின்றி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் நண்பர்கள் கூச்சலிடவே, அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஷவுரியா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்டு அவரது குடும்பத்தினர்களும் நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.