fbpx

ஆரம்பமானது! அதிவேக 5 ஜி நெட் ஒர்க் சேவை…

அதிவேக இணைய வசதியான 5 ஜி நெட்ஒர்க் சேவையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார்.

5 ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்டது. இதில் ரிலையன்ஸ் ஜியோ , பாரதி ஏர்டெல் , வோடபோன் ஐடியா மற்றும் அதானியின் டே்டா வொர்க்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனங்களும் ஏலத்தில் பங்கேற்றன.

இந்த ஏலத்தின் முடிவில் ரூ.1,50,173 கோடிக்கு 5 ஜி சேவை அலைக்கற்றைக்கான உரிமம் விற்பனை செய்யப்பட்டது. தொலைத் தொடர்பு துறையில் அடுத்தக்கட்டத்திற்கு இந்தியா முன்னேறி உள்ளது. இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஜியோ அதிக அளவிலான அலைக்கற்றையை ஏலத்தில் வாங்கியுள்ளது.

இந்த மாதத்திற்குள் சில முக்கிய நகரங்களில் 5 ஜி சேவை தொடங்கப்படவுள்ளது.  இதனிடையே ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப கண்காட்சியான இந்திய கைப்பேசி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் இன்று முதல் வரும் 5ம் தேதி வரை நடைபெறுகின்றது. ஒன்றிய தொலைத் தொடர்புத்துறை மற்றும் இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் இணைந்து இதை நடத்துகின்றன.

5ஜி என்றால் என்ன? : 5 ஜி என்பது அடுத்த தலைமுறை செல்போன் நெட்வொர்க் திறன். இது அதிவேகத்தில் பெரிய அளவிலான தரவு பரிமாற்றத்தை மிக எளிதாக்க உதவும் நெட்வொர்க். எளிதாக புரியும்படி கூறப்போனால் 4ஜி செல்போன் நெட்வொர்க்கின் செயல்பாட்டை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும். இதன் மூலம் ..சுரங்கம் போன்ற துறைகளில் மேலும் அதிகப்படியான வளர்ச்சி கொண்டுவரப்படும் என நம்ப்படுகின்றது.

எந்தெந்த பகுதிகளில் 5ஜி சேவை : 5ஜி சேவை இந்தியாவில் அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை , டெல்லி, காந்திநகர் , குருகாம், ஐதராபாத் , ஜாம்நகர் , கொல்கத்தா, லக்னோ, மும்பை , புனே இடங்களில் முதல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் , அனைத்து தாலுகாக்களுக்கும் விரிவு செய்யப்பட உள்ளது.

Next Post

நான்கு மாட வீதிகளிலும் திருப்பதியில் அன்னபிரசாதம் …

Sat Oct 1 , 2022
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அன்னதானக்கூடத்தில் வழங்கப்படும் அன்னபிரசாதம் 4 மாட வீதிகளில் பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள்தெரிவித்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ நிகழ்ச்சி கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் காலை மற்றும் இரவுகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார். பிரம்மோற்சவத்தின் 5 வது நாளில் , ஆடல் , பாடல் நிகழ்ச்சிகளுடன் சாமி […]

You May Like