Lulu Mall: சென்னையை தொடர்ந்து கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் லுலு நிறுவனத்தின் கிளை வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் 4 நாட்கள் அரசு முறை பயணமாக துபாய் சென்றார். துபாயில் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்புகளை மேற்கொண்டார். துபாயில் நடந்த உலக அளவிலான எக்ஸ்போவில் தமிழ்நாட்டின் அரங்கை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது . தமிழ்நாட்டை நோக்கி பல்வேறு முதலீடுகள் இந்த பயணத்தின் போது ஈர்க்கப்பட்டது.
இந்த பயணத்தின் ஒரு கட்டமாக லுலு க்ரூப் இண்டர்நேஷனல் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்தது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் உணவு பதனிடும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. கிட்டத்தட்ட 3000 ஆயிரம் பேருக்கு இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் இரண்டு மால்களை அமைக்கவும் லூலூ நிறுவனம் முடிவு செய்ததாக கூறப்பட்டது.
அந்தவகையில், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் லுலு மால் அமைக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், மக்கள் அதிகமாக கூடும் இடங்களை தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னையில் மத்தியிலேயே அமைக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறப்பட்டு வருகின்றன. இதேபோல், கோவையிலேயே மேலும் ஒரு லுலு நிறுவனத்தின் கிளை திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.
இதனை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உணவு பதப்படுத்தும் தளங்களை கொண்டு வர லுலு நிறுவனம் திட்டமிடப்பட்டிருக்கிறதாம். இந்த லுலு மால் மேட்டுப்பாளையத்தில் அமைவதாக இருந்தால், உள்ளூர் மக்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைககும் என்று நம்பப்படுகிறது. அதாவது, கோவையில் இரண்டு நிறுவனங்களும், சென்னையில் ஒரு மாலும், திண்டுக்கல் மற்றும் தஞ்சாவூரில் தலா ஒரு நிறுவனமும் என லுலு மால் பிளான் செய்து வருகிறதாம்.
இவைகளில் முதலில் சென்னையில் தொடங்கப்பட்ட பிறகுதான், கோவையில் அமைக்கப்படும் என்றும் சொல்கிறார்கள். கோவை, தஞ்சை, சென்னை என லுலு மால்கள் வருவதற்கு, வியாபாரிகள் சங்கங்கள் தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வரும்நிலையில், அந்தந்த மாவட்ட மக்களோ மிகுந்த எதிர்பார்ப்பில் காத்துள்ளனர்.
இந்த மால்கள் மூலம், ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. இதுவரை கேரளா மற்றும் பெங்களூரில் மட்டுமே அதிகமாக கவனம் செலுத்தி வந்த அந்த நிறுவனம் தமிழ்நாடு பக்கம் தனது கவனத்தை திருப்பி உள்ளது. இவர்கள் ஏற்கனவே கேரளா, பெங்களூரில் மால்களை வைத்து உள்ளனர்.
Readmore: மகிழ்ச்சி செய்தி…! அரிசி விலையில் அதிரடி மாற்றம்… ஆனால் ரேஷன் அட்டைக்காரர்களுக்கு மட்டும்…