டெல்லியில் கழிவுநீர் வாய்க்காலில் இறந்த நிலையில், ஒரு பெண்ணின் உடல் சூட்கேஸில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம்பெண்ணை அவரது காதலன் அப்தாப் கொடூரமாக கொன்று துண்டு துண்டாக வெட்டிய கொலை சம்பவம் நாட்டையே நடுநடுங்க வைத்தது. இதனை அடுத்தும் ஒரு சில சம்பவங்கள் இதேபோல இந்தியாவில் அறங்கேறியுள்ளன. அந்த வகையில், டெல்லியில், அதே போல உயிரிழந்த ஒரு பெண்ணின் உடல் சூட்கேசில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் நேற்று (புதன்கிழமை) அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் சிதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
கழிவுநீர் வாய்க்காலில் ஒரு சூட்கேஸ் இருந்துள்ளது. அதிலிருந்து துர்நாற்றம் வீச தொடங்கியதை அடுத்து டெல்லி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து டெல்லி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உள்ளூர் வாசிகள் உதவியுடன் வாய்க்காலில் இருந்து அந்த சூட்கேஸை மீட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலையான பெண் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.