fbpx

பைக்கை நிறுத்தி திடீரென ஷார்ட்ஸை கழட்டிய வாலிபர்..!! பக்கத்தில் வந்த பெண்..!! நிர்வாணத்துடன் ஒரே ஓட்டம்..!! சிசிடிவி காட்சி வெளியானது..!!

பாகிஸ்தானின் கராச்சி மாகாணத்தில் உள்ள குலிஸ்தான்-இ-ஜவுஹர் பகுதியில் தனது ஆடையை கழற்றிவிட்டு நிர்வாணமான இளைஞன், ஒரு இளம் பெண்ணைத் துன்புறுத்த முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, கடும் சர்ச்சைக்குள்ளானது.

தகவல்களின்படி, குலிஸ்தான்-இ-ஜௌஹரின் பிளாக் 4 இல் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த பகுதியில் தனது பைக்கை நிறுத்தும் ஒரு நபர், ஒரு வீட்டின் முன் தனது ஷார்ட்ஸை கழற்றிவிட்டு, பட்டப்பகலில் ஒரு பெண்ணை தாக்க முயற்சிக்கிறார். அந்த பெண் நெருங்கி வருவதற்காகக் காத்திருந்தபோதே, அவரை நோக்கி அநாகரீகமாக சைகை காட்டுவதும் தெரிகிறது. அதோடு அவர் அருகில் வந்தவுடன், அவரைப் பிடிக்கும் முயற்சியில் பின்னால் இருந்து துரத்தி தொடுவதற்கு முயல்கிறான்.

ஆனால், துணிச்சலான அந்த பெண் தன்னைத் தற்காத்துக் கொண்டு திருப்பி அடிக்கிறார். இதனால் அஞ்சிய அந்த நபர் பின்வாங்குகிறான். உடனடியாக அவன் தனது ஷார்ட்ஸை வேகமாக அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்பிச் செல்வது வரை வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், சம்பவம் குறித்து யாரும் போலீசில் புகார் செய்யவில்லை. இருந்தாலும், இந்த சம்பவம் நிகழ்ந்தது சிசிடிவி காட்சிகளின் மூலம் உறுதியாகி உள்ளதால், அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளதாகவும், விரைவில் குற்றவாளியை பிடிப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.

இதற்கிடையே, சிந்து மாகாண முதல்வர் சையத் முராத் அலி ஷா, இந்த சம்பவத்தை கவனத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவரை உடனடியாக கைது செய்வதை உறுதி செய்து சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜி) மற்றும் கூடுதல் ஐஜி ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார். சந்தேகத்திற்குறிய நபரை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிந்து காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.

Chella

Next Post

’கரகாட்டக்காரன்’ புகழ் நடிகை கனகாவின் வீட்டுக்குள் நடக்கும் மர்மம்..!! பகீர் கிளப்பிய உதவியாளர்..!!

Thu Jul 6 , 2023
தமிழ் சினிமாவில் 1989ஆம் ஆண்டு ராமராஜன் மற்றும் கனகா ஆகிய இருவரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் கரகாட்டக்காரன். இந்த திரைப்படத்தின் மூலம் பட்டித் தொட்டி எங்கும் இவர்கள் இருவருமே பிரபலமானது மட்டுமில்லாமல், கனகா இந்த திரைப்படத்தின் மூலம் தான் சிறந்த கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நடிகை கனகாவுக்கு வெற்றி திரைப்படமாக திகழ்ந்தது விரலுக்கேத்த வீக்கம். அதேபோல கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் மிகவும் சிறப்பாக பணியாற்றிய […]

You May Like