ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் அமித், எப்போதும் செல்போனும், கையுமாக திரிந்து வந்துள்ளான். உணவு, நொறுக்குத் தீனிகள் சாப்பிடும்போது கூட செல்போனை பயன்படுத்தியவாறு இருந்துள்ளான். இந்நிலையில், சம்பவத்தன்று படுக்கையில் இருந்தவாறு ரசகுல்லா சாப்பிட முயன்ற நிலையில், அது தொண்டையில் சிக்கிக்கொண்டது. இதனால் பதறிப்போன அவர் மூச்சிரைத்து இருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ந்துபோன குடும்பத்தினர், அங்குள்ள மருத்துவமனையில் அவரை சேர்த்துள்ளனர்.
ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அவரின் குடும்பத்தினர் கதறியழுதது, அங்கிருந்தோரை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
3 மாதத்திற்கு பின்னர் ஒடிசாவுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த மாமாவை அழைக்கச்சென்ற அமித், வீட்டிற்கு மாமாவுடன் ரசகுல்லா வாங்கி வந்துள்ளார். அதை சாப்பிட்டபோது தான், இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சாப்பிடும்போது செல்போனை பார்த்துக் கொண்டோ, படுத்துக் கொண்டே சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.