fbpx

அவசர அவசரமாக காருக்குள் வைத்து காதலிக்கு தாலிக்கட்டிய காதலன்..!! திரைப்பட பாணியில் அரங்கேறிய திருமணம்..!!

நடிகர் விமல், நடிகை ஓவியா நடிப்பில் வெளியான களவாணி திரைப்படத்தில் கதாநாயகியுடன் தப்பிச் செல்லும் போது, காரில் வைத்து கதாநாயகிக்குத் தாலி கட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இதே போன்ற நிகழ்வு தற்போது உண்மையிலேயே அரங்கேறியுள்ளது.

கர்நாடகா மாநிலம் கொப்பாலைச் சேர்ந்தவர் அமிர்தா [23]. பல்லாரி சிறுகுப்பா தெக்கலகோட்டில் வசிப்பவர் சிவபிரசாத் [25]. இவர்கள் இருவருக்கும் சோஷியல் மீடியா மூலம் பழக்கம் ஏற்பட்டுப் பேசி வந்துள்ளனர். பின்னர் ஒரு கட்டத்தில் இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது. சிவபிரசாத் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அமிர்தா வீட்டில் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அமிர்தாவுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அமிர்தா வீட்டை விட்டு வெளியேறி சிறுகுப்பாவிற்கு சென்றுள்ளார். அங்குக் காத்திருந்த சிவபிரசாத், அமிர்தாவும் காரில் புறப்பட்டுச் சென்றுள்ளனர். காரில் சென்று கொண்டிருக்கும் போதே இருவரும் மாலை மாற்றிக்கொண்டு, அமிர்தா கழுத்தில் சிவபிரசாத் தாலி காட்டியுள்ளார். இதனைத்தொடர்ந்து, காதல் கோடி இருவரும் பாதுகாப்பு கேட்டு நள்ளிரவு நேரத்தில் தெக்கலகோட் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இரவு நேரம் என்பதால், அமிர்தாவைப் பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு, போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதனையறிந்த அமிர்தாவின் பெற்றோர், பெண்கள் பாதுகாப்பு மையத்திற்குச் சென்று வாக்குவாதம் செய்திருக்கின்றனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற போலீசார், அவர்களைச் சமாதானம் செய்து வைக்க முயற்சி செய்தனர். ஆனால், போலீசாரின் கண் முன்னே அமிர்தாவை அவரது பெற்றோரும், குடும்பத்தினரும் வலுக்கட்டாயமாக, காரில் ஏற்ற முயன்றுள்ளனர். ஆனால் அமிர்தா பெற்றோருடன் செல்ல மாட்டேன். காதல் கணவருடன் தான் வாழ்வேன் எனக் கூறியதால் அமிர்தாவை அங்கேயே விட்டுவிட்டு கண்ணீருடன் பெற்றோர் புறப்பட்டுச் சென்றனர். இதனைப் பார்த்த காதல் ஜோடி கண்கலங்கி நின்றனர்.

Chella

Next Post

சிறார்கள் ஸ்கூட்டர், கார் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை, ரூ.25,000 அபராதம்..!! அதிரடி உத்தரவு..!!

Thu Jan 4 , 2024
18 வயதுக்குட்பட்டவர்கள் ஸ்கூட்டர் மற்றும் கார் ஓட்டுவதற்கு உத்தரப்பிரதேச அரசு தடை விதித்துள்ளது. சிறுவயது பிள்ளைகள் ஸ்கூட்டர் அல்லது கார் ஓட்டும் காட்சிகளைப் பரவலாகக் காணமுடிகிறது. இதனை தடுக்க 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை ஸ்கூட்டர் அல்லது கார் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான வழிகாட்டுதல்களை உத்தரப்பிரதேச போக்குவரத்து ஆணையர் சந்திர பூஷன் சிங் […]

You May Like