fbpx

முதலாளியை காதலிக்க தனது காதலியை அனுப்பி வைத்த காதலன்..!! உடலை துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்..!!

கேரளாவில் சில நாட்களுக்கு முன்பு ஓட்டல் அதிபரை கடத்திச்சென்று கொலை செய்து, அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்து வனப்பகுதியில் வீசப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடல் பாகங்களை மீட்டு விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. விசாரணையில், மலப்புரத்தை சேர்ந்த சித்திக் (58), கோழிக்கோடு எலத்திபாலத்தில் ஓட்டல் நடத்தி வந்துள்ளார். அந்த ஓட்டலில் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த சிபில் (19), பர்ஹானா (18), ஆஷிக் (23) ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர்.

இந்த 3 பேரும் சேர்ந்துதான் தங்களது முதலாளியை கொடூரமாக கொலை செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும், சித்திக்கிடம் இருந்து ரூ.5 லட்சம் பணம் பறிக்க சதி செய்தனர். இதற்காக அவரை ஹனி டிராப்பில் சிக்க வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. குற்றம் சாட்டப்பட்ட சிபில், பர்ஹானா, ஆஷிக் ஆகிய மூவரும் எம்.டி.எம்.ஏ. என்ற கொடிய போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் ஆவர். ஓட்டல் முதலாளி சித்திக் மற்றும் இளம்பெண் பர்ஹானா இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. பர்ஹானின் தந்தையும் கொல்லப்பட்ட சித்திக் இருவரும் நண்பர்கள்.

இருவரும் வெளிநாட்டில் ஒன்றாக பணிபுரிந்துள்ளனர். தந்தைகள் அறிமுகத்தால் சித்திக் அறிமுகம் கிடைத்தது. பின்னர் சித்திக்குடன் பர்ஹானாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது பின்னர் கள்ளத்தொடர்பாக மாறி உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பர்ஹானா உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து, சித்திக்கிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால், அந்த பணத்தை கொடுக்க சித்திக் தயாராக இருந்தார். இந்த சூழலில் இரவில் தனிமையில் இருக்க சித்திக்கை பர்ஹானா அழைத்துள்ளார். அங்கு வந்த சிபிலுக்கும், ஆஷிக்கும் சித்திக்குடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவரை கொலை செய்து உடலை மறைக்க துண்டு துண்டாக வெட்டி வீசினர்.

பர்ஹானா முதலாளி சித்திக் உடன் கள்ளத்தொடர்பில் இருந்தாலும், இக்கூட்டத்தில் உள்ள ஷிபிலி என்பவரை காதலித்தும் வந்துள்ளார். காதலனின் திட்டத்தின்படிதான் பர்ஹானா சித்திக் உடன் பேசியது, பழகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நெருக்கம்தான் சித்திக்கை மிரட்டி பணம் பறிக்க தூண்டியுள்ளது. அதன் பின் வாக்குவாதம் ஏற்பட்டு, கடைசியில் கொலையில் முடிந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது 3 பேரும் சிறையில் கம்பி எண்ணுகின்றனர்.

Chella

Next Post

கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலை கவிழ்க்க சதி..? தண்டவாளத்தில் லாரி டயர் கிடந்ததால் பரபரப்பு..!!

Fri Jun 2 , 2023
திருச்சியில் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே மர்ம நபர்கள் வைத்த டயர் மீது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் ரயிலின் 4 பெட்டிகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தண்டவாளத்தில் லாரி டயர் வைத்த நபர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி லால்குடி அருகே மேலவாலாடி பகுதியில் நேற்றிரவு ரயில்வே தண்டவாளத்தில் பெரிய டயர் ஒன்றை மர்ம நபர்கள் வைத்துள்ளனர். சென்னை – கன்னியாகுமாரி சென்று […]

You May Like