புதுக்கோட்டை மாவட்டம் சிலட்டூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் இவருடைய மகள் ஜெகதீஸ்வரி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த இம்ரான் பாரிக் என்ற வாலிபருடன் காதல் உறவிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது 9 வருடமாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு நடுவே இம்ரான் மலேசியாவிற்கு சென்று விட்டார். அங்கிருந்து ஜெகதீஸ்வரி தொடர்பு கொண்ட அவர் மலேசியாவுக்கு அவரையும் அழைத்துள்ளார். ஆகவே இருவரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் மலேசியாவில் ஒன்றாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில், ஜகதீஸ்வரி கர்ப்பமாகி இருக்கிறார்.
இதனை தெரிந்து கொண்ட இம்ரான் அவரை மலேசியாவில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். தற்போது ஊருக்கு செல் பின்னர் அங்கு வந்து உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று தெரிவித்து மலேசியாவில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து விட்டார்.
இந்த நிலையில், ஜெகதீஸ்வரி தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்து நடந்ததை எல்லாம் தெரிவித்ததால் ஜெகதீஸ்வரியின் பெற்றோர் இம்ரானின் வீட்டிற்கு சென்று நடந்தவற்றை தெரிவித்துள்ளனர். அவர்கள் எங்களுக்கு எதுவுமே தெரியாது என்று மறுத்துவிட்டனர். இத்தகைய நிலையில் தான் இம்ரான் ஜெகதீஸ்வரிடம் செல்போனின் பேசுவதை நிறுத்திவிட்டார்.
ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை அறிந்து கொண்ட ஜெகதீஸ்வரி, நேற்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஆட்சியரை நேரில் சந்தித்து மனு வழங்கியிருக்கிறார். அதில் தன்னுடைய காதலனோடு தன்னை சேர்த்து வைக்க வேண்டும், அல்லது தன்னை ஆசை வார்த்தை கூறி குடும்பம் நடத்தி ஏமாற்றியவர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.