fbpx

திருமணம் முடிந்த கையோடு வாக்களிக்க வந்த மணப்பெண்!! – இடைதேர்தலில் சுவாரஸ்யம்..!!

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி உடல்நலக்குறைவால் ஏப்ரல் 6-ஆம் தேதி காலமான நிலையில், இத்தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இத்தொகுதியில் திமுக சார்பில் அன்னியூர் அ.சிவா, பாட்டாளி மக்கள் கட்சியின் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் பொ. அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சை வேட்பாளர்கள் என 29 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. விறு விறுப்பாக இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஆசூர் கிராமத்தைச் சேர்ந்த தேவகி என்ற பெண்னுக்கு புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த அன்பரசன் எம்பவருடன் இன்று காலைப் புதுச்சேரியில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஆசூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் மணப்பெண் தேவகி கணவருடன், மணக்கோலத்தில் சென்று வாக்களித்தார்.

Read more | பனிச்சரிவில் சிக்கி பலி..!! 22 ஆண்டுகளுக்கு பின் உடல் கண்டுபிடிப்பு..!!

English Summary

The bride voted with her hand after the wedding ceremony at Panchayat Union Primary School in Asur.

Next Post

தொடர் தோல்வி.. அதிமுக நிர்வாகிகளுடன் இன்று முதல் 9 நாட்கள் EPS ஆலோசனை!!

Wed Jul 10 , 2024
EPS intense consultation with AIADMK executives for 9 days from today

You May Like