fbpx

விருந்தினர்களுக்கு முத்தம் கொடுத்த மணப்பெண்..!! முகத்தில் சிகரெட் புகையை ஊதிய மாமியார்..!! கடுப்பில் மணமகன் எடுத்த முடிவு..!!

திருமணத்தில் மணப்பெண் விருந்தினருக்குப் பறக்கும் முத்தம் கொடுத்ததால் மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் சம்பல் பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அங்கு வந்திருந்த விருந்தினர்களை வரவேற்கும் போது மணப்பெண் பறக்கும் முத்தம் கொடுத்துள்ளார். அதே நேரத்தில் மணப்பெண்ணின் தாயார், சிகரெட் பிடித்து வரும் விருந்தாளிகளின் முகத்தில் ஊதியுள்ளார். இந்த சம்பவம் மணமகனுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

இருவரின் செயல்களினால் விரக்தியடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இது குறித்து, மணமகனின் குடும்பத்தினர் கூறுகையில், அவர்கள் திருமண அரங்கிற்கு வந்தபோது வரவேற்பு வழங்கப்பட்டதாகவும், சிறிது நேரத்திலேயே மணப்பெண்ணின் தாயார் போதையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, அவர் ஆடலாடியும், சிகரெட் பிடித்து விருந்தினர்கள் முகத்தில் மீது ஊதியதாகவும் கூறினர். இதனால், எரிச்சலடைந்த மணமகன் இதற்கு மேல் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று கூறி திருமணத்தை நிறுத்தியதாக மணமகனின் தந்தை கூறியுள்ளார். இச்சம்பவத்தால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Chella

Next Post

UGC அதிரடி..! செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கல்லூரியில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணம் திருப்பித் தர வேண்டும்...!

Wed Jul 5 , 2023
நடப்பு கல்வி ஆண்டில் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கல்லூரியில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பித் தர வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது. யுஜிசி கட்டணத்தை திரும்பப்பெறும் கொள்கையை மீறும் உயர்கல்வி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று பல்கலைக்கழக மானியக் குழு மீண்டும் எச்சரித்துள்ளது. தாங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பைத் தேர்வுசெய்ய குறிப்பிட்ட காலத்திற்குள் முழு கட்டணத்தையும் திரும்பப்பெற அனுமதிக்குமாறு நிறுவனங்களை ஆணையம் கேட்டுக் கொண்டது. […]
செப்.5 முதல் மாணவிகளுக்கு ரூ.1000..? சிறப்பு விருந்தினர் இவர்தான்..! வெளியான முக்கிய தகவல்

You May Like