டெல்லியில் காதலியை கொன்று Freezer-ல் வைத்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்த தாபா உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
தெற்கு டெல்லியில் உள்ள நசாப்கார்க்கை பகுதியை சேர்ந்தவர் சச்சின் கெலாட். தாபா உரிமையாளரான இவர், டெல்லி உத்தம் நகரை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் அலைகழித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், சச்சின் கெலாட் வேறொரு பெண்ணை திருமணம் செய்யவுள்ளதாக அறிந்த இளம்பெண், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சச்சின் கெலாட், கடந்த சிலநாட்களுக்கு முன்பு காதலியை கொன்று, அவரது தாபாவில் உள்ள Freezer-ல் வைத்துள்ளார். இதையடுத்து, காதலியை கொன்றுவிட்டு சென்ற சச்சின் கெலாட், வேறொரு பெண்ணையும் திருமணம் செய்துள்ளார். இதையடுத்து, தகலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், 3 நாட்கள் Freezer-ல் இருந்த காதலியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து, காதலன் சச்சின் கெலாட்டை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தலைநகர் டெல்லியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காதல் விவகாரத்தில் இதுபோன்ற கொடூர கொலைகள் தொடர்ந்து நடந்துவருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.