மத்திய பிரதேசம் இந்தூர் மாவட்டம் சிம்ரொல் நகரில் வசித்து வருபவர் பன்வர் சிங் (45). இவருக்கும் வேறொரு நபருக்கும் இடையே சிம்ரொல் நகரில் நிலப்பிரச்சினை இருந்தது. பன்வர்சிங் தனது ஆதரவாளர்களிடன் நேற்று பிரச்சினைக்குரிய நிலப்பகுதிக்கு சென்றார், அங்கு எதிர் தரப்பும் திரண்டதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.
அப்போது, அவ்வழியாக வந்த ரோந்து வந்த காவல்துறையினர் மோதலை தடுக்க இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது, பன்வர் சிங் திடீரென அவர் வைத்திருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி கொண்டு தீ வைத்துக்கொண்டார். இதில், அவர் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் தீயை அணைத்து தீக்காயங்களுடன் பன்வர் சிங்கை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தீக்குளித்த பன்வர் சிங் 41 சதவிகித காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். அதேவேளை, இந்த சம்பவத்தின் போது சிலர் காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தினர். இதை தொடர்ந்து, இந்த மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிலரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.