மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 28 காளைகளை அடக்கி, ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய் முதலிடம் பிடித்தார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் அழகுபேச்சி என்ற மாணவி தனது காளையை களத்தில் அவிழ்த்துவிட்ட போது, மாடு பிடி வீரர் விஜய் அதனை மிக அழகாக அடக்கி பரிசுகளை வென்றார். காளை தோற்றது என்ற கவலையுடன் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவியை அழைத்து அவரிடம் தான் வென்ற பரிசுகளை வழங்கிய விஜய், அவரை உற்சாகப்படுத்தி அனுப்பி வைத்தார். பல தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளின் காளை மாடுகள் மத்தியில் பள்ளியில் படிக்கும் மாணவியின் காளையும் பங்கேற்றிருப்பதை உணர்ந்த அவர், தான் வென்ற பரிசுகளை காளையின் உரிமையாளருக்கே வழங்கியிருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Next Post
சருமத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு இந்த வாட்டர் தான்.. ட்ரை பண்ணுங்க..!
Sun Jan 15 , 2023
வறண்ட சருமத்தைத் தவிர்க்க சன்ஸ்கிரீன் மற்றும் மாய்ஸ்சரைசிங் முக்கியம். ரோஸ் வாட்டர் வறண்ட சரும பிரச்சனைகளை தடுக்க உதவும். பெயர் குறிப்பிடுவது போல, ரோஸ் வாட்டர் என்பது ரோஜா இதழ்கள் மற்றும் தண்ணீரின் கலவையாகும். ரோஜா இதழ்களை தண்ணீரில் ஊறவைத்து ரோஸ் வாட்டர் தயாரிக்கப்படுகிறது. ரோஸ் வாட்டர் சருமத்தின் இயற்கையான எண்ணெய்களை சமன் செய்து, சருமத்தை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரோஸ் வாட்டர் முக மாய்ஸ்சரைசராகவும் பயனுள்ளதாக […]

You May Like
-
2023-08-17, 7:00 am
மாஸ்…! வாட்ஸ்-அப் செயலி Login செய்ய புதிய வசதி…! நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு…!
-
2024-01-20, 11:45 am
பாராசூட்கள் என்ன ஆடைகளால் தயாரிக்கப்படுகின்றன?… ஆச்சரியமான தகவல்கள் இதோ!