தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் வரும் 30ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 30ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், தொழிற்கொள்கை, புதிய விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாக முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.