மோர்பி பகுதியின் ஆற்றின் மீது கட்டப்பட்ட கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 400க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் தத்தளிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
குஜராத்தில் உள்ளது மோர்பி பகுதி . அங்குள்ள ஆற்றைக்கடக்க கேபில் பாலம் கட்டப்பட்டு இருந்தது. அதன் மீது பயணிகள் சென்று கொண்டிருந்தபோதே திடீரென அந்த பாலம் உடைந்து ஆற்றில் மூழ்கியது. இதில் சுமார் 400 பேர் தண்ணீரில் தத்தளிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தகவல்அறிந்து வந்த மீட்பு குழுவினர் தண்ணீரில் விழுந்தவர்களை மீட்கும் பணியில்ஈடுபட்டுள்ளனர்.
மீட்புப் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மீட்பு படையினருக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிராமர் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார். அத்துடன் விபத்தில் உயிரிழப்பு நேரிட்டால் ரூ.2 லட்சம் நிவாரணமும் அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50000 நிவாரணம் அறிவித்துள்ளார். மாநில அரசு சார்பில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலம் இடிந்து விழுந்த விபத்தில் கிட்டத்தட்ட 100 பேர் சிக்கிக்கொண்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. எனவே மீட்பு பணிகள் நிறைவடைந்த பின்னரே எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளார்கள். உயிரிழப்புகள் உள்ளதா என்பது தெரியவரும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த மோர்பி பாலம் கட்டப்பட்டது. மராமத்து பணியை அடுத்து 4 நாட்களுக்கு முன்புதான் இந்த பாலம் திறக்கப்பட்டது. குஜராதி புத்தாண்டை ஒட்டி இந்த பாலம் திறக்கப்பட்டது. ஒரேவா என்ற நிறுவனம் இந்த மராமத்து பணிகளை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.