தஞ்சை மாவட்டம் திருவையாறு ஓடத்துறை தெருவில் பிரபல ஸ்வீட் ஸ்டால் ஒன்று உள்ளது. ஆங்கில புத்தாண்டை ஒட்டி இந்த கடையில் பல விதமான இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கப்பட்டு கண்ணாடி ஷோக்கேசில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. பிரபலமான இந்த ஸ்வீட் கடையில் திருவையாறு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மக்கள் அதிகமாக கூடுவது வழக்கம், தற்போது பண்டிகை காலம் என்பதால் வியாபாரம் களைகட்டி வருகிறது.
அப்போது கண்ணாடி ஷோகேசுக்குள் நுழைந்த பூனை ஒன்று, விற்பதற்கு வைத்திருந்த பலகாரங்களை சாப்பிட்டு கொண்டிருந்தது. இந்த காட்சியை கடைக்கு வந்த ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து சமுக வலைதளங்களில் பதிவிட்டுள்ள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பறவை காயச்சல், பன்றி காய்ச்சல், என பல்வேறு நோய்கள் பரவி வரும் நிலையில் பூனை எச்சில்பட்ட உணவை நாம் வாங்கி சாப்பிடும்போது என்ன ஆகும். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.