fbpx

Onion: 5 லட்சம் டன் வெங்காயத்தை நேரடியாக கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவு…!

நடப்பு ஆண்டில், ரபி பருவ அறுவடை சந்தைக்கு வரத் தொடங்கி உள்ள நிலையில், கூடுதல் கையிருப்புத் தேவைக்காக 5 லட்சம் டன் வெங்காயத்தை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யத் தொடங்குமாறு தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பான NCCF மற்றும் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பான NAFED ஆகிய நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

நேரடி பரிமாற்றம் மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் மாற்றப்படுவதை உறுதி செய்ய NAFED மற்றும் NCCF ஆகியவை விவசாயிகளை முன்கூட்டியே பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் ஆண்டு வெங்காய உற்பத்தியில் 72 முதல் 75 சதவீதம் ரபி பருவத்தில் கிடைக்கிறது. காரீப் வெங்காயத்துடன் ஒப்பிடும்போது, இது சிறந்த தன்மையைக் கொண்டிருப்பதாலும், நவம்பர் அல்லது டிசம்பர் வரை விநியோகத்திற்காக சேமித்து வைக்க முடியும் என்பதாலும் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

ஆண்டு முழுவதும் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்வதற்கு ரபி பருவ வெங்காயம் முக்கியமானதாகும். நுகர்வோர் விவகாரங்கள் துறை, NAFED மற்றும் NCCF மூலம், 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 6.4 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை வாங்கியது. நாஃபெட் மற்றும் என்சிசிஎஃப் ஆகியவற்றின் தொடர்ச்சியான கொள்முதல் 2023 ஆம் ஆண்டில் ஆண்டு முழுவதும் வெங்காய விவசாயிகளுக்கு லாபகரமான விலைக்கு உத்தரவாதம் அளித்தது.

Vignesh

Next Post

’அன்னைக்கு அந்த கதறு கதறுனாரே’..!! திடீரென மாறிய துரை வைகோ..!! பம்பரம் சின்னத்துக்கு டாட்டா..!!

Wed Mar 27 , 2024
பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால், வேறு சின்னங்களை கேட்டுள்ளோம். அதில் போட்டியிடுவோம் என்று மதிமுக திருச்சி தொகுதி வேட்பாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கோரிய மனு மீது இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், மதிமுகவுக்கு […]

You May Like