ஆந்திரா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள மொத்தம் 13 தங்க சுரங்கங்களை, வரும் நாட்களில் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆந்திர பிரதேசத்தில் மொத்தம் பத்து சுரங்கங்கள் ஏலத்தில் விடப்பட உள்ளன. இவற்றில் ஐந்து சுரங்கங்கள், இம்மாதம் 26ஆம் தேதியன்று ஏலத்தில் விடப்பட உள்ளன. மீதி 5 சுரங்கங்கள், இம்மாதம் 29ஆம் தேதியன்று ஏலம் விட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பு, கடந்த மார்ச் மாதத்திலேயே தொங்கிவிட்டது. மீதமுள்ள மூன்று சுரங்கங்களுக்கான ஏலம், எப்போது நடைபெறும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த 3 தங்கசுரங்கங்களுக்கான ஏலத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பு கடந்த மே 21ஆம் தேதியன்று வழங்கப்பட்டது. கடந்த நிதியாண்டில் மட்டும் பல்வேறு தாதுக்களுக்கான மொத்தம் 45 சுரங்கங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.