சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து இன்றோடு 31 நாட்கள் நிறைவு பெறுகிறது. அவர் ஒரு தலைசிறந்த சமூக சேவகர். ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்பவர். எம்ஜிஆருக்கு பிறகு கருப்பு எம்ஜிஆர் என புகழ் பெற்றவர் விஜயகாந்த் தான்.
அவர் சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கியது. அவருடைய புகழ் பொதுமக்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும். விருது என்பது யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை ஆராய்ந்துதான் மத்திய அரசு விஜயகாந்துக்கு கொடுத்துள்ளது. விஜயகாந்த் ஒரு சமூக சேவகனாக செயல்பட்டதால் தான் அவருக்கு அந்தப் பாராட்டு விருது கொடுக்கப்பட்டது.
யாருக்கு எந்த நேரத்தில் விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தெரியும். அவருடைய சேவையை கருத்தில் கொண்டு தான் தற்போது அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.