fbpx

இனி கடைசி தேதி வரை இதற்கு வாய்ப்பு… டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…

டிஎன்பிஎஸ்சி விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி வரை விண்ணப்பங்களில் உள்ள குறைகளை சரி செய்ய புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது..

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் பல்வேறு தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பெற்றுவருகிறது. விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை இணையவழியில் சமர்ப்பிக்கும் போது சில நேரங்களில் தவறான தவறாகப் பதிவு செய்துவிடுகின்றனர். இதனால் ஒரு சில விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படவேண்டிய நிலை ஏற்படுகிறது. கடைசி நாளில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் பல விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் மாற்றங்கள் செய்ய போதுமான கால அவகாசம் இல்லை என தெரிவித்துள்ளனர். இதனை பரிசீலித்த தேர்வாணையம், அவ்வாறு விவரங்களை தவறாக பதிவு செய்து சமர்ப்பித்த விவரங்களை மாற்றிக்கொள்ள மற்றுமொரு வாய்ப்பளிக்கலாம் என முடிவு செய்துள்ளது.

அதன்படி, விண்ணப்பதாரர்கள் ஒரு குறிப்பிட்ட தேர்வுக்கென தங்கள் விண்ணப்பத்தில் சமர்ப்பித்த விவரங்களை, விண்ணப்பம் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாள் வரை மாற்றிக்கொள்ள வழிவகை செய்துள்ளது. அதன்படி தேர்வாணையத்தால் இனிவரும் காலங்களில் வெளியிடப்படும் அறிவிக்கைகளுக்கான இணையவழி விண்ணப்பங்களில், விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த விவரங்களை, விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் வரை மாற்றிக்கொள்ள வாய்ப்பு அளிப்பதுடன், விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் முடிந்த பின்னர் நான்கு நாட்கள் கழித்து, விண்ணப்ப தகவல்களை சரிபார்த்து மாற்றிக்கொள்ள 3 நாட்கள் (Application Correction Window Period) வழங்கப்படும்.

இந்த 3 நாட்களில் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் தகவல்களை தவறாக பதிவு செய்திருந்தால், அதனை மாற்றி சரியான தகவல்களை சமர்ப்பிக்கலாம், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை மீண்டும் ஒருமுறை சரி பார்த்துக்கொள்ளலாம். ஏற்கனவே விண்ணப்பத்தில் பதிவு செய்த விவரங்களை, விண்ணப்பம் திருத்தம் செய்யும் காலத்தில் மாற்றும் போது அதனால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதற்கு விண்ணப்பதாரரே பொறுப்பாவார் விண்ணப்பம் நேர்செய்யும் (Application Correction Window Period) காலத்திற்கு பின்னர் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்திலுள்ள விவரங்களை மாற்ற முடியாது.

விண்ணப்பத்திலுள்ள விவரங்களை மாற்றக்கோரி தேர்வாணையத்தில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள், கடிதங்கள், மின்னஞ்சல் போன்றவற்றின் மீது தேர்வாணையத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படமாட்டாது எனவே விண்ணப்பதாரர்கள் இந்த விண்ணப்ப நேர் செய்யும் / திருத்தம் செய்யும் கால அவகாசத்தினை சரியான முறையில் பயன்படுத்தி சரியான தகவல்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது..

Maha

Next Post

மக்களே கவனம்.. காது சுத்தப்படுத்தும் பஞ்சு பொருத்திய பிளாஸ்டிக் குச்சிகளுக்கும் தடை...! மத்திய அரசு தகவல்...!

Fri Jul 22 , 2022
சுற்றுச்சூழலை பாதிக்கின்ற தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்களின்‌ பயன்பாட்டினை தவிர்க்கும்‌ வகையில்‌ தமிழக அரசு சார்பில் பொதுமக்கள்‌, வணிக நிறுவனங்கள்‌ மற்றும்‌ விநியோகஸ்தர்களுக்கு பல்வேறு அறிவுரைகள்‌ வழங்கப்பட்டும்‌, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டும்‌ தீவிர நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின்‌ அறிவுறுத்தல்களை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்களை உபயோகப்படுத்துபவர்களிடமிருந்து அப்பொருட்களை பறிமுதல்‌ செய்து அபராதம்‌ விதிக்கவும்‌. தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்களை பயன்படுத்தும்‌ நிறுவனங்களின்‌ தொழில்‌ உரிமத்தை ரத்து […]

You May Like