fbpx

ஆரம்பம்…! தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 மடங்கு…! வானிலை மையம் தகவல்…!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.

நாளை முதல் 22-ம்‌ தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இரண்டாம் உலகப் போரின் போது சேவை செய்த பெண் 118-வது வயதில் காலமானார்...!

Thu Jan 19 , 2023
உலகின் மிக வயதான நபரான பிரஞ்சு கன்னியாஸ்திரி ஆண்ட்ரே காலமானார். உலகின் மிக வயதான நபரான பிரஞ்சு கன்னியாஸ்திரி ஆண்ட்ரே, தனது 118 வயதில் பிரான்சின் தெற்கு நகரமான டூலோனில் காலமானார். பிப்ரவரி 11, 1904 இல் லூசில் பிறந்த அவர், 1944 இல் ஒரு கத்தோலிக்க அறக்கட்டளையில் சேர்ந்தபோது ஆண்ட்ரே என்ற பெயரைப் பெற்றார். அவர் தனது 117வது பிறந்தநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார். […]

You May Like