Election: தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் 22 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர். தேர்தலை அமைதியாக நடத்துவது, தேர்தல் விதிமீறல்கள், பண பட்டுவாடாவை தடுப்பது, வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர்.
Readmore: நாடு முழுவதும் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை…! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு…!