பாகிஸ்தானில் முன்னாள் தலைமை நீதிபதி துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு சமீப காலமாக பாகிஸ்தானில் பயங்கரவாதம் தலை தூக்கி வருவதால் சாமானிய பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
பலுசிஸ்தானின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் முகமது நூர் மெஸ்கன்ஷி இவர் ஹரன் என்ற பகுதியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார். முடித்துவிட்டு வெளியே வந்தபோது மசூதி வாசலிலேயே மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் படபடவென சுட்டுத்தள்ளினார்கள். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
பலுசிஸ்தான் முன்னாள் தலைமை நீதிபதி கொல்லப்பட்ட சம்பவத்தில் முதல் அப்துல் குதூஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். நீதிபதியாக சேவையாற்றியதை யாராலும்மறக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார் மேலும் குவெட்டாபார் அசோசியேசனின் தலைவர் அஜ்மல் கான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.