fbpx

அசத்தல் அறிவிப்பு…! 60 % மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இலவச ஸ்கூட்டர்…! இன்று முதல் தொடக்கம்…!

12-ம் வகுப்பு தேர்வில் 60% பெற்ற மாணவர்களுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கப்படும் என அசாம் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற 35,800 சிறந்த மாணவர்களுக்கு இலவச ஸ்கூட்டர்களை வழங்கப்படும் என அசாம் அரசு ஏற்கனவே அறிவித்தது. 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற 29,748 மாணவிகளுக்கு, 75 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பெற்ற 6,052 ஆண்களுக்கு ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.

கவுகாத்தியில் உள்ள ஜனதா பவனில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் கடந்த மாதம் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அமைச்சரவை முடிவுகளை அறிவித்த அசாம் அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா, “இன்று முதல் ஸ்கூட்டர் விநியோக விழா நிகழ்ச்சி நடைபெறும் மற்றும் தொடக்க நிகழ்ச்சி கமரூப் மாவட்டத்தில் நடைபெறும் என தெரிவித்தார்.

முன்மொழிவின் ஒரு பகுதியாக மாவட்ட நோடல் அதிகாரிகள் மூலம் பயனாளிகளுக்கு பதிவு மற்றும் காப்பீடு செய்வதற்கான நிதி உதவியை உயர்கல்வித் துறை வழங்கும். இந்த நடவடிக்கைக்கு மொத்தமாக ரூ.258.9 கோடி செலவாகும் என அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

#TANGEDCO: "ஆதாருடன் மின் இணைப்பு" வருவோரிடம் அதை கேட்க கூடாது!!!

Wed Nov 30 , 2022
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் இருக்கின்றன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சார வாரியம் அறிவித்திருக்கிறது. டிசம்பர் மாதம் இறுதிக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே, பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று ஆதார் எண்ணை மின் இணைப்பு […]
மின் இணைப்புடன் ஆதாரை இணைத்தால் மட்டுமே இதை செய்ய முடியும்..!! மின்சார வாரியம் எச்சரிக்கை..!!

You May Like