பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் கடலூரில் இன்று நடைபெற்றது.. தமிழக பாஜக தலைவர் அண்னாமலை, மூத்த தலைவர்கள் ஹெச், ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.. வேறு யாருக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை.. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. குறிப்பாக சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக அராஜகம் நடந்ததாக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. மேலும் ஆளுநரை ஒருமையில் பேசியதற்காக முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
வேங்கைவயலில் பட்டியலின மக்களுக்கு நேர்ந்த கொடுமைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.. கட்சியின் வளர்ச்சிக்காக நிதி சேர்ப்பது, பூத் கமிட்டியை வலுப்படுத்துவது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
அதே போல் ராமர் பாலம் பாதிக்கப்படாமல் சேது கால்வாய் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தையும் பாஜக நிறைவேற்றி உள்ளது.. மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14-ம் தேதி திருச்செந்தூரில் தனது நடைபயணத்தை தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது..