அரியலூர் மாவட்டத்தில் வரும் 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா செய்திக்குறிப்பில்; “அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேர் திருவிழாவினை முன்னிட்டு ஏப்ரல் 25-ம் தேதி வியாழக்கிழமை அன்று அரியலூர் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து விதமான கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை விடப்படுகிறது.
கல்லூரி மற்றும் பள்ளிகளில் தேர்வு தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளன. தேர்வு நடைபெறும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது.அத்துடன் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினை கருதியும் அவசர அலுவலர்கள் மேற்கொள்ளும் பொருட்டு செயல்படும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மே 4ம் தேதி சனிக்கிழமை பணிநாளாக செயல்படும் என தெரிவித்துள்ளார்.