fbpx

நீண்ட நாட்களாக தேடப்பட்டுவந்த லஷ்கர் -இ-தொய்பா அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் உயர்மட்ட தளபதியும், தங்கிரி பயங்கரவாத தாக்குதலின் முக்கிய நபருமான ரியாஸ் அகமது, காஷ்மீரில் உள்ள மசூதிக்குள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள தங்கிரி கிராமத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் முக்கிய தலையாக செயல்பட்ட அபு காசிம் என்கிற ரியாஸ் அகமது என்ற லஷ்கர் -இ-தொய்பா அமைப்பின் தளபதி சுட்டுக்கொல்லப்பட்டார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ராவல்கோட்டில் உள்ள அல்-குதுஸ் மசூதிக்குள் வைத்து பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

இந்த ஆண்டில் மட்டும் பாதுகாப்பு படையினரால் தீவிரவாத அமைப்பின் 4வது தளபதி சுட்டுக்கொல்லப்பட்டார். 1999-ல் எல்லையைத் தாண்டி வெளியேறிய ரியாஸ் அகமது, எல்லை மாவட்டங்களான பூஞ்ச் ​​மற்றும் ரஜோரியில் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டுவந்துள்ளான். மேலும் லஷ்கர் இ தொய்பாவின் தலைமை தளபதியான சஜ்ஜாத் ஜாத்தின் நெருங்கிய கூட்டாளியாகவும் ரியாஸ் அகமது இருந்தான் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Kokila

Next Post

உடல் பருமனாக இருப்பவர்கள் பேருந்தில் பயணிக்க சிரமமா இருக்கா..? அமைச்சர் சொன்ன செம குட் நியூஸ்..!!

Sat Sep 9 , 2023
தமிழ்நாட்டில் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அத்தியாவசிய போக்குவரத்து சேவைகள் அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து கிராம பகுதிகளுக்கும் பஸ் பயண வசதியை ஏற்படுத்தி, தமிழகம் முழுவதும் தடையற்ற போக்குவரத்து சேவையும் அளித்து வருகிறது தமிழ்நாடு அரசு. அத்துடன், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு இலவச பஸ் பயணச்சலுகை, சாதாரண நகர கட்டண பஸ்களில், “மகளிர் கட்டணமில்லா […]

You May Like