fbpx

குளிர்விக்க வரும் மழை..!! எப்போது..? எங்கெங்கு பெய்யும்..? வானிலை மையம் சொன்ன சூப்பர் நியூஸ்..!!

தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவினாலும், ஒரு சில இடங்களில் வெப்பநிலை குறையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இன்று (பிப்ரவரி 27) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (பிப்.28) மற்றும் மார்ச் 1ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 2, 3 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

Chella

Next Post

நிராகரிக்க இப்படி ஒரு காரணமா..? இன்டர்வியூவ் பரிதாபம்..!! HR சொன்ன அந்த காரணம்..!! வசைபாடும் நெட்டிசன்கள்..!!

Mon Feb 27 , 2023
புதிதாக பணியில் சேரும் நபர்களிடம் நிறுவனங்கள் கெடுபிடி காட்டுவது வழக்கமானதாக இருக்கும். குறிப்பாக, முன் அனுபவம் இல்லாதவர்களாக இருந்தாலும் பரவாயில்லை என நேர்காணலுக்கான விளம்பரங்களை வெளியிட்டாலும், துறை சார்ந்து எந்த அளவுக்கு அனுபவம் உள்ளது என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்படுவதாக தொடர்ந்து சமூக வலைதளங்கள் மீம் உள்ளிட்ட பதிவுகளின் வாயிலாக அறிய முடியும். அதேபோல கொரோனா ஊரடங்கை அடுத்து வீட்டிலிருந்தே பணியாற்றும் வசதி பரவலாக்கப்பட்டு வருகிறது. இதற்கும் பணியாளர்களிடம் சொந்த லேப்டாப், […]

You May Like