உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் கோவிந்த்குண்டு பகுதியில் உள்ள கோவர்தன் ஏரியில் அப்பகுதி மக்கள் குளித்தும், துணிதுவைத்து வந்துள்ளனர். இந்நிலையில், அந்த ஏரியில் அடையாளம் தெரியாத சுமார் 24 வயது பெண்ணின் உடல் மிதந்துள்ளது. இதனை கண்ட மக்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், நிர்வாண நிலையில் இருந்த அந்த பெண்ணின் சடலத்தை மீட்டனர். மேலும், பெண்ணின் கைகள் மற்றும் கால்கள் தாவணியால் கட்டப்பட்டிருந்தன. அத்துடன் அவரது முகம் ஜாக்கெட்டால் மூடப்பட்டிருந்தது.
இதையடுத்து, அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுவரை அந்த பெண் யார் என்பது குறித்து கண்டறியப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இளம்பெண்ணை கொலை செய்து கை, கால்களைக் கட்டி நீரில் வீசியது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.