Ukraine – Russia War: உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த ஒத்திகை துவங்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளதால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன.
ரஸ்ய உக்ரைன் போரானது 3 ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்ற நிலையில், இருநாடுகளின் இராணுவமும் தாக்குதலை அதிகரித்து வருவதால் போர் தீவிரம் அடைந்து வருகிறது. இன்றுவரை முடிவுப்பெறாத இந்த யுத்தத்திற்கு மத்தியில் உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் ஒத்திகை துவங்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது. இதனால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
சமீபத்தில் ரஷ்யாவின் இறையாண்மையை காக்க அணு ஆயுதத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என ரஷ்ய அதிபர் புடின் பலமுறை கூறியிருக்கிறார். ஆனால் அணு ஆயுத தாக்குதல் நடத்தக் கூடாது என ரஷ்யாவுக்கு உலக நாடுகள் வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில் உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் ஒத்திகை துவங்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது. இதனால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
Readmore: இனி unread message தொல்லை இருக்காது!… வாட்ஸ்அப் வரவிருக்கும் புதிய அம்சம்!