fbpx

சவுக்கு சங்கரை மே 17-ம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை நீதிமன்றம் உத்தரவு…!

சவுக்கு சங்கரை மே 17-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக வலை தளங்களில் தமிழக அரசு குறித்து கடுமையாக விமர்சித்து வந்தார் யூடியூபர் சவுக்கு சங்கர். முதல்வர் ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன், அமைச்சர் உதயநிதி ஆகியோர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் யூ டியூப் சேனல் ஒன்றிக்கு சவுக்கு சங்கர் நேர்காணலில் காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் நேற்று அதிகாலையில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை அங்கிருந்து கோவை சைபர் கிரைம் காவல் துறை அலுவலகத்திற்கு தேனியில் இருந்து காவல் துறையினர் அழைத்து சென்றனர்.

அவர் மீது ஐந்து பிரிவுகள் என் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். நேற்று மாலை சவுக்கு சங்கருக்கு கோவையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இதையடுத்து சவுக்கு சங்கரை மே 17 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் இருந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் .

Vignesh

Next Post

குட் நியூஸ்..! இலவசமாக ஆதார் புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...!

Sat May 4 , 2024
தனிநபர்கள் தங்கள் ஆதார் அட்டை விவரங்களை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு. தனிநபர்கள் தங்கள் ஆதார் அட்டை விவரங்களை மார்ச் 14, 2024 வரை இலவசமாகப் புதுப்பிக்கலாம் என்று UIDAI ஆரம்பத்தில் அறிவித்தது. இதற்கான முடிவடைய உள்ள நிலையில் காலக்கெடுவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பு இரண்டாவது முறையாகும். மக்கள் தங்கள் ஆதார் விவரங்களைப் புதுப்பிப்பது மிகவும் முக்கியம், குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக ஆதார் அட்டை வைத்திருப்பதால் பலரும் தங்கள் […]

You May Like