fbpx

குஜராத் மாநிலத்தில் எட்டு மாதத்தில் 50 பேருக்கு தூக்கு தண்டனை விதித்த கோர்ட்…!!

குஜராத் மாநில விசாரணை நீதிமன்றங்களில் 2006 முதல் 2021 வரையிலான 15 வருடங்களில் 46 பேருக்கு மட்டுமே தூக்கு தண்டனை வழங்கப்பட்டுளது. இந்நிலையில், இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரையிலான எட்டு மாதங்களில் 50 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு தீா்ப்புகள் வெளியாகி இருக்கின்றன.

2002 அகமதாபாத் தொடா் குண்டுவெடிப்பு சம்பவத்தில், 56 போ் பலியான நிலையில், 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட், குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடா்புடைய குற்றவாளிகள் 38 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் தீா்ப்பு வழங்கியது.

மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் அமைந்துள்ள கோர்ட், குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு மற்றும் கொலை வழக்குகளில் போக்ஸோ சட்டத்தின் கீழ் தூக்கு தண்டனை வழங்கியுள்ளன. ஆணவக் கொலை வழக்கில் இரண்டு பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2006-ஆம் வருடம் முதல் 2021-ஆம் வருடம் வரையிலான 15 வருடங்களில் 46 பேருக்கு மட்டுமே தூக்குதண்டனை என தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

2021-ஆம் வருடம் வரையிலான 15 வருடங்களில் நான்கு பேருக்கு மட்டும் தூக்கு தண்டனையை குஜராத் உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. பல்வேறு நகரங்களில் இருக்கும் விசாரணை கோர்ட், பாலியல் குற்றங்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு (போக்சோ) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட, சிறார்களை கற்பழித்து கொலை செய்த வழக்குகளில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Rupa

Next Post

மியான்மரில் சிக்கித் தவிக்கும் 300 இந்தியர்கள்.. எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து சித்ரவதை செய்யும் சர்வதேச மோசடி கும்பல்...

Tue Sep 20 , 2022
தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி சர்வதேச மோசடியில் சிக்கி 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மியான்மரில் சிக்கியுள்ளனர். தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, இந்தியர்களை சர்வதேச கும்பல் ஏமாற்றி உள்ளது. அப்படி ஏமாறியவர்களை அந்த கும்பல் சட்ட விரோதமாக மியான்மருக்கு அழைத்து வந்துள்ளது. இந்த சர்வதேச மோசடியில் சிக்கி 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மியான்மரில் மியாவாடி பகுதியில் சிக்கியுள்ளனர். சிக்கிய 300 பேரில் 60 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். […]
Part Time Job..!! 6 நாளில் ரூ.32 லட்சம்..!! சிக்கினால் மொத்த பணமும் காலி..!! இளைஞர்களே உஷார்..!!

You May Like