fbpx

தோண்ட தோண்ட கிடைத்த சடலம்..!! மொத்தம் 47..!! அதிர்ந்துபோன போலீஸ்..!! வசமாக சிக்கிய மதபோதகர்..!!

கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ளது கென்யா. இங்கு மாலிண்டி என்ற நகரம் உள்ளது. இது ஒரு கடற்கரையோர பகுதியாகும். இங்கே பால் மெகன்சி என்ற மதபோதகர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பண்ணை ஒன்று இங்கே உள்ளது. இங்கு ஏராளமானோர் தங்கி இருக்கிறார்கள். இந்த பண்ணையில் 15-க்கும் மேற்பட்டவர்கள் உடல் மெலிந்து, எலும்பும் தோலுமாக உள்ளனர். பார்ப்பதற்கே படுமோசமான நிலையில் காணப்படுவதாகவும், இதில் 4 பேர் இறந்து விட்டதாகவும் போலீசுக்கு அதிர்ச்சிகரமான புகார் வந்தது.

இதையடுத்து போலீசார், பண்ணையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். பண்ணைக்கு சொந்தமான நிலத்தை தோண்டினர். முன்னதாக, அந்த பகுதியில் தோண்ட போவதால், அனைத்து போலீசாரும் மாஸ்க் மற்றும் பாதுகாப்பு உடைகள் அணிந்து கொண்டுதான் இந்த பணியில் ஈடுபட முனைந்தனர். நிலத்தை சற்று தோண்டும்போதே திடீரென சடலங்கள் தென்பட்டன. தோண்ட, தோண்ட ஏராளமான உடல்கள், எலும்புக் கூடுகளை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். முதலில் 21 சடலங்கள் மட்டுமே கிடைத்தது. அதன்பிறகு, மேலும் 26 சடலங்கள் கிடைத்தன. இதுவரை 47 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த உடல்கள் எல்லாமே, வெள்ளை நிற பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்டு இருந்தன. ஆனால், அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பதே தெரியவில்லை. அதாவது, அந்த பண்ணையில் இருப்பவர்களிடம் பட்டினியாக இருந்தால், இறைவனை சந்திக்க முடியும் என்று மதபோதகர் பால் மெகன்சி சொன்னாராம்..

இதைக்கேட்டு, அவர்களும் பட்டினி கிடந்ததாக தெரிகிறது. நாள்பட்ட பட்டினி காரணமாகவே, அவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் பால் மெகன்சியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பண்ணை நிலத்தில் வேறு யாரும் புதைக்கப்பட்டு உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Chella

Next Post

அடுத்த அதிரடி..!! செட்டிநாடு குழும நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..!!

Mon Apr 24 , 2023
செட்டிநாடு குழும நிறுவன அலுவலகங்களிலும் அதன் தொடர்புடைய இடங்களிலும் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றன. 2020ஆம் ஆண்டு செட்டிநாடு குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அப்போது அந்நிறுவனம் ரூ.700 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், ரூ.23 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வெளிநாடுகளிலும் கணக்கில் காட்டாத ரூ.110 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று […]
அடுத்த அதிரடி..!! செட்டிநாடு குழும நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..!!

You May Like