fbpx

“பத்து ஆண்டுகளில் அரசியல் வரையறை மாறிவிட்டது” -ஜே.பி நட்டா

பாஜக ஆட்சி அமைத்த இந்த 10 ஆண்டுகளில் அரசியலின் வரையறை மாறி விட்டதாக பாஜக தேசிய தலைவர்  ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சித்தி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராஜேஷ் மிஸ்ராவை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், “கடந்த 10 ஆண்டு கால பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் அரசியலின் வரையறை மாறிவிட்டது. மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதில்லை என்றும்,  சாதி அல்லது வர்க்கத்தின் அடிப்படையில் அவர்கள் பிளவுபடுவதில்லை எனவும் கூறினார்.

மக்களை பிரித்து வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் காங்கிரஸ் ஆல் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது. வரையறை மாறிவிட்டதால் வாக்கு வங்கி மூலமாகவோ, மக்களை ஏமாற்றுவதன் மூலமாகவோ இனி அரசியல் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளுக்கு  ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7 மற்றும் மே 13 ஆகிய தேதிகளில்  நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் பாஜக 28 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Post

Rahul Gandhi: "மோடி இல்ல எந்த சக்தியாலும் தமிழர்களை வீழ்த்த முடியாது"… நெல்லைப் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு.!

Fri Apr 12 , 2024
Rahul Gandhi: 2024 ஆம் வருட பொது தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. 102 பாராளுமன்ற தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வருவதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி மற்ற எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியிருக்கிறது. தமிழகத்தில் இந்த கூட்டணியில் […]

You May Like