fbpx

Solar : செம வாய்ப்பு…! பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்திற்கு பதிவு முகாம்…!

பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்திற்கான பதிவு முகாமை அஞ்சல்துறை தொடங்கியுள்ளது.

இது குறித்து அஞ்சல் துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்திற்கான பதிவு முகாமை அஞ்சல்துறை தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதும் ஒரு கோடி குடும்பங்கள் வரை பயனடையும் வகையில், கூரைகளில் சூரிய தகடு அமைப்பதற்கு மானியம் வழங்குவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கான பதிவுக்கு வீடுகளில் தபால்காரர்கள் உதவுவார்கள்.

தூய்மையான, செலவு குறைந்த எரிசக்தி எதிர்காலத்திற்காக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைத்து தனிநபர்களையும நாங்கள் ஊக்குவிக்கிறோம். மேலும் விவரங்களுக்கு https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தைக் காணவும் அல்லது பகுதி தபால்காரரையும், அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : The Department of Posts has started the registration campaign for Prime Minister’s Solar Home Free Electricity Scheme.

Vignesh

Next Post

Onion 2024: வந்தது அதிரடி உத்தரவு..! மார்ச் 31-ம் தேதி வரை வெங்காய ஏற்றுமதி தடை விதித்த மத்திய அரசு...!

Fri Mar 1 , 2024
வெங்காயத்தின் ஏற்றுமதிக்கான தடை, மார்ச் 31-ம் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெங்காயத்தின் ஏற்றுமதிக்கான தடை, மார்ச் 31ம் தேதி வரை தொடரும் என, மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிசம்பர் 8, 2023 அன்று, அரசாங்கம் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இந்த தடை உத்தரவு தற்பொழுது மார்ச் 31 வரை தடை நீக்கப்பட்டுள்ளது. இந்த தடை குறித்து மத்திய நுகர்வோர் விவகார துறை செயலாளர் ரோஹித் […]

You May Like