fbpx

தொடரும் பதற்றம்… இது போன்ற செய்தியை கடும் நடவடிக்கை…! மாவட்ட ஆட்சியர் அதிரடி எச்சரிக்கை…!

கோவையில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ தற்போது நிலவி வரும்‌ சட்டம்‌ மற்றும்‌ ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில்‌ கொண்டு, காவல்துறையுடன்‌ இணைந்து சட்டம்‌ மற்றும்‌ ஒழுங்கினை கண்காணிக்கவும்‌ பாதிப்புகள்‌ ஏதும்‌ ஏற்படா வண்ணம்‌ அனைத்து முன்னேற்பாடுகளும்‌ மாவட்ட நிர்வாகத்தால்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் நிகழ்வுகளில்‌ பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை. மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமராக்கள்‌ மூலம்‌ ஆய்வு செய்தும்‌ உரிய விசாரணையும்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும்‌, 24.09.2022 மத நல்லிணக்கத்தை பேணும்‌ வகையில்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ தலைமையில்‌, மேற்கு மண்டல காவல்‌ துறைத்‌ தலைவர்‌,மாநகர காவல்‌ ஆணையர்‌, மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ ஆகியோர்‌ ஜமாத்‌ அமைப்புகள்‌ மற்றும்‌ இந்து அமைப்புகளுடன்‌ ஆலோசனை மேற்கொண்டனர்‌. மேற்படி அமைப்புகளிடம்‌ மாவட்டத்தில்‌ சட்டம்‌ மற்றும்‌ ஒழுங்கினை பேணிக்காக்க ஒத்துழைப்பு அளிக்க கோரப்பட்டது. 23.09.2022 அன்று முதல்‌ நான்கு அதிவிரைவுப்படை (RAF)கம்பெனிகள்‌ மற்றும்‌ சிறப்பு காவல்‌ படை மற்றும்‌ ஊர்க்காவல்‌படையினர்‌ காவல்துறையுடன்‌ இணைந்து பாதுகாப்பு பணியில்‌ ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்‌.

வருவாய்த்துறையினைச்‌ சேர்ந்த அலுவலர்கள்‌ நிர்வாக நடுவர்களாக நியமனம்‌ செய்யப்பட்டு சட்டம்‌ மற்றும்‌ ஒழுங்கு கண்காணிப்பு பணியில்‌ ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்‌. நகர்ப்புற பகுதிகளில்‌ காவலர்களுடன்‌ வார்டு வாரியாக மாநகராட்சி அலுவலர்கள்‌ மற்றும்‌ ஊரகப்பகுதிகளில்‌ கிராம வாரியாக கிராம நிர்வாக அலுவலர்கள்‌ உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டு தொடர்‌ கண்காணிப்பு பணியில்‌ ஈடுபடும்‌ பொருட்டும்‌, உயர்‌ அலுவலர்களுக்கு தகவல்‌ தெரிவிக்கும்‌ பொருட்டும்‌ அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ கடந்த இரு நாட்களாக நடைபெற்று வரும்‌ நிகழ்வுகள்‌ தொடர்பாக பொதுமக்கள்‌ யாரும்‌ அச்சப்பட வேண்டியதில்லை எனவும்‌, பொதுமக்கள்‌ மத்தியில்‌ பதற்றத்தை ஏற்படுத்தும்‌ வகையில்‌ மேற்படி நிகழ்வுகள்‌ குறித்தும்‌, சமூக வலைதளங்களில்‌ தவறான தகவல்கள்‌ பரப்பும்‌ நபர்கள்‌ மீது வழக்கு பதிவு செய்து கடும்‌ நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்படும்‌.

தங்கள்‌ பகுதியில்‌ ஏதேனும்‌ அசம்பாவிதங்கள்‌ நிகழும்‌ வண்ணம்‌ இருந்தாலோ, சந்தேகிக்கப்பட கூடிய நடவடிக்கைகளில்‌ ஏதேனும்‌ நபர்கள்‌ ஈடுபட்டாலோ உடனடியாக மாவட்ட காவல்‌துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மாம்பழம், மாங்காய் போன்றவை எளிதாகக் கிடைக்கும் ஒருவகை ஆரோக்கியமான பழம் எனினும் மாம்பூக்களில் உள்ள நன்மைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு?

Sun Sep 25 , 2022
மாம்பழத்தில் எண்ணற்ற ரகம் உள்ளது. சில பழங்கள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கின்றன. அதே சமயம் மலச்சிக்கல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு மாங்காய் தீர்வாக உள்ளது. அதே சமயம் மாம்பூவில் எவ்வளவு நன்மைகள் உள்ளது தெரியுமா? மாங்காயில் ஊறுகாய் , சாம்பார் போன்ற சுவையான உணவு வகைகளும் உள்ளன. மாங்காய் சாப்பிடுவதால் உணவு செரிக்கவும் , வயிற்றுப்புண்ணை ஆற்றவும் நமக்கு எண்ணற்ற வகையில் உதவியாக உள்ளது. அதே சமயம் அல்சருக்கான […]

You May Like