fbpx

சூப்பர் நியூஸ்… TAHDCO-வின் மானியம்… குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தி நிர்ணயம்…! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…!

தாட்கோ நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாந்தி தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு ஆதிதிராவிடர்‌ வீட்டு வசதி மற்றும்‌ மேம்பாட்டு கழகம்‌ – தாட்கோ துறையானது 1974-ம்‌ ஆண்டு துவங்கப்பட்டு, ஆதிதிராவிடர்கள்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ பொருளாதார மேம்பாடு அடையும்‌ வகையில்‌ பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. ஒரு நாட்டின்‌ முன்னேற்றம்‌ என்பது கல்வி, பொருளாதாரம்‌ ஆகியவற்றை அடிப்படையாகக்‌ கொண்டது. அதன்படி, நாடு முன்னேற வேண்டுமாயின்‌ சமுதாயத்தில்‌ பின்‌ தங்கிய நிலையில்‌ இருக்கும்‌ ஆதிதிராவிடர்கள்‌, பழங்குடியினர்கள்‌ கல்வி மற்றும்‌ பொருளாதாரத்தில்‌ மேம்பாடு அடைய வேண்டும்‌. அத்தகையை இலட்சியத்தினை அடையும்‌ வகையில்‌ தமிழ்நாடு ஆதிதிராவிடர்‌ வீட்டுவசதி மற்றும்‌ மேம்பாட்டு கழகம்‌ – தாட்கோ துறையானது ஆதிதிராவிடர்கள்‌ மற்றும்‌ பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களைச்‌ செயல்படுத்தி வருகின்றது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர்‌ வீட்டுவசதி மற்றும்‌ மேம்பாட்டு கழகத்தின்‌ (தாட்கோ) மூலம்‌ தொழில்‌ முனைவோர்‌ திட்டம்‌, இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத்‌ திட்டம்‌, மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்களுக்களுக்கான பொருளாதார கடனுதவிதிட்டம்‌, மகளிர்‌ நிலம்‌ வாங்கும்‌ திட்டம்‌, நிலம்‌ மேம்பாட்டு திட்டம்‌, துரித மின்‌ இணைப்பு வழங்கும்‌ திட்டம்‌, மாவட்டஆட்சியர்‌ விருப்புரிமை நிதி திட்டம்‌, மேலாண்மை இயக்குநர்‌ விருப்புரிமை நிதித்‌ திட்டம்‌, தாட்கோ, தலைவரின்‌ விருப்புரிமை நிதித்‌ திட்டம்‌ உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள்‌ செயல்படுத்தப்பட்டு, இணையதளம்‌ விண்ணப்பிக்கும்‌ தகுதியான பயனாளிகளுக்கு உரிய நலத்திட்டங்கள்‌ வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும்‌, தாட்கோ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத்‌ திட்டத்திற்கு ஏற்கனவே குடும்ப ஆண்டு வருமானம்‌ ரூ.2 இலட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. அதிக எண்ணிக்கையிலான நபர்கள்‌ பயனடையும்‌ வகையில்‌, தற்போது ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்‌ துறையின்‌ அரசானை நடைமுறையிலுள்ள குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3.00 இலட்சமாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, தாட்கோ நலத்திட்டங்களை (பெறுவதற்கு ஆதிதிராவிடர்‌வகுப்பைச்‌ சார்ந்தவர்கள்‌ http://applicationtahdco.com என்ற இணையதள முகவரியிலும்‌, பழங்குடியினர்‌ வகுப்பைச்‌ சார்ந்தவர்கள்‌ http://fast.tandco.com என்ற இணையதள முகவரியிலும்‌ விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்‌.

Vignesh

Next Post

மிகப் பெரிய அதிர்ச்சி... பள்ளி மாணவர்களுக்கான உணவு கட்டணத்தில் ஒதுக்கீடு முறைகேடு.‌‌..!

Mon Aug 29 , 2022
பழங்குடியினர் நலத்துறை பள்ளி மற்றும் விடுதி மாணவர்களுக்கான உணவு கட்டண ஒதுக்கீடு முறைகேடு நடைபெறுவதாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழகம் சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தனது கடிதத்தில்; தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 300 க்கும் மேற்பட்ட பள்ளிகளும் சுமார் 45 க்கும் மேற்பட்ட விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன . மேற்படி பள்ளி மற்றும் விடுதிகளில் […]

You May Like