fbpx

#Tngovt: அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை… பட்டாசு கடை அமைக்க… இது அனைத்தும் கட்டாயம் இருக்க வேண்டும்.‌.‌.! ‌

பட்டாசு கடை அமைக்க தர்மபுரி மாவட்டத்தில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்‌.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 24.10.2022-ஆம்‌ தேதி அன்று வரவிருக்கும்‌ தீபாவளிப்‌ பண்டிகையின்போது தருமபுரி மாவட்டத்தில்‌ தற்காலிக பட்டாசுக்‌ கடைகள்‌வைத்து வியாபாரம்‌ செய்ய விரும்புவோர்‌ வெடி பொருள்‌ சட்டம்‌ 1884 மற்றும்‌விதிகள்‌ 2008-இன்படி பட்டாசுக்‌ கடை வைக்க உரிமம்‌ கேட்டு விண்ணப்பங்களை இணையம்‌ வழியாக விண்ணப்பிக்கலாம்‌. விண்ணப்பத்தின் படி தற்காலிக பட்டாசு கடை அமைக்கப்படவுள்ள கட்டடம்‌, கல்‌ கட்டடம்‌ அல்லது தார்சுக்‌ கட்டடமாக இருத்தல்‌ வேண்டும்‌.

கடையின்‌ இருபுறமும்‌ வழி அமைத்திருக்க வேண்டும்‌. மின்சார விளக்குகள்‌ மட்டும்‌ கடையில்‌ பயன்படுத்தப்பட வேண்டும்‌. மேலும்‌, தீயணைப்புத்‌ துறை மற்றும்‌ காவல்‌ துறையிடமிருந்து உரிமம்‌ வேண்டப்படும்‌ கட்டடத்திற்கு தடையின்மைச்‌ சான்று பெற்றிருத்தல்‌ வேண்டும்‌. கடை வைக்க விண்ணப்பிக்கும்‌ போது இந்நடைமுறைகளை பின்பற்றப்பட வேண்டும்‌.

தேவைப்படும்‌ ஆவணங்கள்‌:

1.விண்ணப்பதாரர்‌ புகைப்படம்‌, 2. முகவரிச்‌ சான்று, 3. புகைப்படத்துடன்‌ கூடிய ஆதார்‌/பான்‌ கார்டு/வாக்காளர்‌ அடையாள அட்டை, 4. பட்டா அல்லது சொத்து பத்திரம்‌, 5. வாடகைக்‌ கட்டடமாக இருந்தால்‌ நோட்டரி வழக்கறிஞரின்‌ கையொப்பத்துடன்‌ கூடிய அசல்‌ வாடகைஒப்பந்தப்பத்திரம்‌ 6. உரிமக்‌ கட்டணமாக ரூ.500/- அரசுக்கணக்கில்‌ செலுத்தி அதற்கான அசல்‌ சலான்‌ 7. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து வரிசெலுத்திய இரசீது மற்றும்‌ கட்டட வரைபடம்‌-2 பிரதிகள்‌ மற்றும்‌ உரிய இதர ஆவணங்களுடன்‌ இருக்க வேண்டும்.

பொது இ-சேவை மையங்களில்‌ இணைய வழியாக 30.09.2022 ஆம்‌ தேதிக்குள்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌. அதன் பின்னர்‌ வரும்‌ மனுக்கள்‌ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாந்தி தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

பயங்கர எச்சரிக்கை.. வரும் 11-ம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை...! வானிலை மையம் கணிப்பு.‌‌...!

Thu Sep 8 , 2022
தமிழகத்தில் வரும் 11-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வட தமிழ்நாடு பகுதிகளை ஒட்டி நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வரும் 11-ம் தேதி […]

You May Like