fbpx

திமுக-காங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும்!!! திமுக,அதிமுக-வுக்கு பிறகு பெரிய கட்சி “காங்கிரஸ்”…

திமுக-காங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறியதாவது “மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் தாலுக்கா மருத்துவமனைகளில் டயலாசிஸ் வசதி அதேபோல் கேன்சர் நோய்களுக்கான சிகிச்சை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துளோம்” என கூறினார்.

காங்கிரஸ் கட்சியில் தற்போது நடைபெற்று வரும் குழப்பங்கள் குறித்தான கேள்விக்கு பதிலளித்து பேசிய திருநாவுக்கரசர்.. “கட்சி என்று இருந்தால் கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம் இவை பேசி சரி செய்ய வேண்டிய விஷயம் என்றார். கடல் என்று இருந்தால் அலைகள் இருப்பது போல, கட்சி என்று இருந்தால் பிரச்சனைகள் இருப்பது இயல்பு எனவும் இவை தமிழக காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் பாதிக்காது” என திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரை நியமிப்பது தொடர்பான முடிவுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவு செய்ய வேண்டிய விஷயம் எனவும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி சென்று காங்கிரஸ் தலைமையை சந்திப்பது வழக்கமான ஒன்று எனவும் கூறினார்.

திமுக காங்கிரஸ் கூட்டணி தெளிவாக உள்ளது எனவும் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் திமுக அதிமுக வுக்கு பிறகு காங்கிரஸ் பெரிய கட்சி தான். தமிழகத்தில் பா.ஜக வளர்ந்து ஆட்சியை எல்லாம் பிடிக்க முடியாது என விமர்சித்த அவர் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி என பேசுபவர்கள் , பா.ஜ.க அதிமுக கூட்டணியிலிருந்து விலகி பா.ஜ.க தலைமையில் கூட்டணி அமைக்குமா என கேள்வி எழுப்புவதில்லை என்றார் திருநாவுக்கரசர்

Kathir

Next Post

மாதம் ரூ.1,10,000 சம்பளம்..!! மத்திய அரசு வேலை..!! விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்..!!

Tue Nov 22 , 2022
தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியின் முழு விவரங்கள்… பதவியின் பெயர் பணியிடம் சம்பளம் GeneralManager(Project) 1 ரூ.1,10,000/- Asstt. Engineer(Civil ) 1 ரூ.58,819/- Junior Engineer(Civil ) 4 ரூ.27,000/- வயது வரம்பு: இப்பணிகளுக்கு […]
டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசு துறையில் வேலை..!! மாத சம்பளம் ரூ.30,000..!!

You May Like