ஜம்முகாஷ்மீரில் பயங்கர வாதிகளுடன் தாக்குதலில் ஈடுபட்ட நாய் என்கவுன்டரில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு – காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் திங்கள் கிழமை பயங்கரவாதிகளுடன் ராணுவ நாயான ஜும் தாக்குதலில் ஈடுபட்டது. தாக்குதலின் போது இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இரண்டு பாதுகாப்பு படையினர் இந்த சம்பவத்தில் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்த ஜூம் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். கோகர்நாக் பகுதியில் என்கவுன்டர் நடைபெற்றுது. இதில் இரண்டு குண்டுகளால் துளைக்கப்பட்டு ஜூமிற்கு படுகாயம் ஏற்பட்டது.
முன்பு, மூத்த ராணுவ அதிகாரி ’’ ஜூம் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றது. பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் ராணுவத்தினருக்கு பணியில் ஏராளமான இடங்களில் பயன்படுட்டுள்ளது. ஜூம் குணம் பெற்றுவிடும் என நம்புகின்றேன்.’’ என்றார். ஆனால் அவரது எண்ணம் பலிக்கவில்லை. அவர் இந்த கருத்தை பதிவு செய்த சில மணி நேரங்களில் இறந்துவிட்டதாக தகவல் வெளியானது.
ராணுவ பயிற்சியின் போது ஜூம் எவ்வாறு செயல்பட்டது என்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
பயங்கர வாதிகளைக் கண்டறிந்து வீழ்த்துவதற்கு ஜூமிற்கு பயிற்சி பெற்றிருந்தது. பயிற்சிக்குழுவின் ஒரு பகுதியாகத்தான் ஜூம் செயல்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.